உண்மை சம்பவம் பற்றிய கட்டுரை..

உண்மை சம்பவம் பற்றிய கட்டுரை..
1950 களில் கொட்டமேலா நாட்டில் அமெரிக்கக் கார்ப்பரேட் நிறுவனமான United Fruits Company இயற்கை வளங்களை வகைதொகையில்லாமல் சூறையாடியது. இந்த நிறுவனத்திற்கு உறுதுணையாகவும் கண்டும் காணமலும் இருந்தது அப்போதைய கொட்டமேலா கைப்பாவை அதிபர் யுபிக்கோவின் (Ubico) அரசாங்கம். எதிர்க்கட்சித் தலைவரும் பொதுவுடைமை சித்தாந்தத்தைப் பின்பற்றியவருமான ஜெகாபோ அர்பென்ஸ்(Jacobo Arbenz) இந்தச் சுரண்டலை பகிங்கரமாக எதிர்த்து அதை 1955-ம் வருடம் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்டு விவசாயிகளிடம் ஒப்படைத்தார். இந்தப் புரட்சிக்கர நடவடிக்கையில் சே குவேராவும் பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்வுக்குப் பிறகு, லத்தீன் அமெரிக்காவில் அமெரிக்க அரசின் தலையீடும் கொடூரங்களும் ஒவ்வொன்றாக உலகத்திற்கு தெரியவந்தன. 1959-ம் வருடம் க்யூபாவில் அமெரிக்க அரசின் ஆசியோடு ஆட்சி புரிந்துவந்த சர்வாதிகாரி படிஸ்டாவை ஃபிடல் கேஸ்ட்ரோவும் சே குவேராவும் கெரில்லாப் போர்த் தந்திரப் புரட்சி வழியாக விரட்டினர். இந்தப் புரட்சி லத்தீன் அமெரிக்காவில் மட்டுமல்ல உலகளவிலும் பெரும் அதிர்வுகளை எற்படுத்தியது. ஆனால் க்யுப புரட்சியில் பங்கேற்றவர்களுக்கு (ஃபிடல், சே குவேரா உட்பட) உத்வேகத்தையும் ஆற்றலையும் கொடுத்தது கொட்டமேலா நாட்டின் ஜெகாபா அர்பென்ஸின் விவசாயிகளுக்கு ஆதரவான புரட்சி நடவடிக்கை…

பிறகு அமெரிக்க சிஐஏ பின்புலத்தில் ஜெகாபாவை விரட்டியடித்து கார்லோஸ் அர்மெஸ் அதிபராக பதவியேற்றார். ஜெகாபா மெக்சிகோவுக்கு தப்பி ஓடினார். உயிர் பிழைக்க ஒவ்வொரு நாடாக ஓடினார். ஐரோப்பாவிலும் தஞ்சம் அடைந்தார். ஆனால் மெக்சிகோவில் 1971-ம் வருடம் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.

இது உண்மை வரலாறு….

அரசியலையும் கலையையும் இலக்கியத்தில் இணைத்தவர் நம்மிடையே வாழும் மேதை மரியா வெர்கஸ் லோசா … எந்த சமரசத்திற்கும் ஆட்படாதவர்…பெரு அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோற்றார்…2010-இல் இலக்கியத்திற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது…. தன்னுடைய ஆசான் ஹிலியோ கொர்த்தஸாரிடமிருந்து அரசியல் விழிப்புணர்வை கற்றவர்… ஆனால் இன்றளவிலும் அரசியல் ஈடுபாட்டை இம்மியளவு கூட குறைக்கவில்லை…இப்போது 83 வயதிலும் அயராமால் எழுதி வருகிறார்…

வரும் அக்டோபர் 8-ம் தேதி அவருடைய புதிய நாவல் Hard Times வெளிவரவுள்ளது…இந்த நாவல் மேற்சொன்ன கொட்டமேலா அரசியல் வரலாறு பின்புலத்தில் ஜெகாபாவும் ஒரு கதாபாத்திரமாக வருகிறார்…உண்மை சம்பவத்தையும் கற்பனை கதாபாத்திரங்களை இணைத்து எழுதியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்…ஜெகாபாவின் மர்மான கொலை தன்னை நிம்மதி இழக்க செய்து அவருடைய ஆன்மாதான் தன்னை எழுதத்தூண்டிருக்கலாம் என்கிறார்…

ஜெகாபைவை கொன்றது யார்? என இதுவரையில் தெரியாதபோதும், லோசா” Rafael Trujillo கொன்றிருக்கலாம்” என நகைச்சுவையாக குறிப்பிடுகிறார்..… Rafael Trujillo என்ற கற்பனை கதாபாத்திரம் லோசா 2000-ல் எழுதி வெளியிட்ட Feast of the Goat என்ற நாவலில் வருகிறது… அந்த நாவல் வேறொரு கோணத்தில் லத்தின் அமெரிக்க அரசியலை எழுதியிருப்பார். நாவலில் கொட்டமேலா நாட்டு சர்வாதிகாரியின் பெயர் Rafael Trujillo…

இந்த முதிய வயதிலும் இதை எழுதுவதற்கு மூன்று வருடங்களுக்கு மேல் கடுமையாக உழைத்துள்ளார்..கொட்டமேலா நாட்டிற்கு பலமுறை சென்று பலதரப்பட்ட மக்களிடம் உண்மை சம்பவங்களைப் பற்றி கேட்டு அறிந்துள்ளார்…

Hard Times பலத்த எதிர்பார்ப்பை உலகளவில் ஏற்படுத்தியுள்ளது…🌐