உலகக் கோப்பை வென்ற பிரான்ஸ் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

பாரீஸ்:
ரஷியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் – குரோஷியா அணிகள் மோதின. இதில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோசியா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
உலகக் கோப்பை வென்ற பிரான்ஸ் அணிக்கு உலக தலைவர்க்ள் பலர் வாழ்த்து தெரிவித்தனர். பிரான்ஸ் அணியின் வெற்றியை அந்நாட்டு ரசிகர்கள் பல்வேறு இடங்களில் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதைத் தொடர்ந்து, பிரான்ஸ் திரும்பிய அந்நாட்டு வீரர்களுக்கு தலைநகர் பாரீசில் லட்சக்கணக்கான ரசிகர்கள் திரணடு வரவேற்றனர்.

Leave a comment

Your email address will not be published.