உலகம் முழுக்க ஏப்ரல் 25 ஆம் தேதி உலக மலேரியா தினமாக (World Malaria Day ) அனுசரிக்கப்படுகிறது.

🌍உலகம் முழுக்க ஏப்ரல் 25 ஆம் தேதி உலக மலேரியா தினமாக (World Malaria Day ) அனுசரிக்கப்படுகிறது. அனோபிலஸ் வகை பெண் கொசு மலேரியா நோய்க்கு காரணமான பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணியை மனிதர்களிடம் பரப்புகின்றன. இவ்வகை ஒட்டுண்ணி ஒரு திருடன் மாறுவேடங்களை மாற்றுவது போல் , மேல் பரப்பு புரதங்களுக்கு இடையே எங்கு வேண்டுமானாலும் அதனுடைய தோற்றத்தை மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டவை. இதன் மூலம் போராடி துரத்தும் மனித நோய் எதிர்ப்பு மண்டலத்தை விட இது ஒரு படி மேலாக உள்ளது. இந்த ஒட்டுண்ணிகள் இரத்த சிவப்பணுக்களில் பெருக்கமடைந்து இரத்த சோகை, சுவாசித்தலில் சிரமம் ஏற்படுதல், இதயத் துடிப்பு குறைவு, காய்ச்சல், கடுங்குளிர், போன்ற உடல்நலக் குறைவு மற்றும் சில நோயாளிகளுக்கு நோய் தீவிரம் அடைவதன் காரணத்தினால் ஆழ்மயக்கம் (கோமா) மற்றும் மரணம் கூட நேரிடலாம்.
ஆண்டுக்கு சுமார் 7 லட்சம் பேர் மலேரியாவால் மரணம் அடைகிறார்கள். இந்தியாவில் மலேரியாவினால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு சுமார் 15,000 என்று உலக சுகாதார நிறுவனத்தின் [WHO] புள்ளி விவரம் தெரிவிக்கிறது.🌐