உலகின் கடைசி 2 வெள்ளை பெண் காண்டாமிருகங்கள்:

உலகின் கடைசி 2 வெள்ளை பெண் காண்டாமிருகங்கள்: செயற்கையான முறையில் 7 முட்டைகளை கருவுற செய்த விஞ்ஞானிகள். கென்யாவில் சுமார் 1970-ம் ஆண்டுகளில் சுமார் 20,000 எண்ணிக்கையில் காண்டா மிருகங்கள் இருந்துள்ளன. இவற்றின் எண்ணிக்கை படிபடியாக குறைந்து தற்போது 650 காண்டா மிருகங்கள் மட்டுமே உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை கருப்பு காண்டா மிருகங்கள்தான். இந்த நிலையில் நைரோபியின் வடக்குப் பகுதியில் சுடானுடன் வசித்து வந்த இரண்டு வெள்ளை பெண் காண்டா மிருங்கங்ளான நஜின், ஃபட்டுவிலிருந்து 10 முட்டைகளை எடுத்து அதை செயற்கையான முறையில் கருத்தரிக்க முயன்றதில் 7 முட்டைகள் வெற்றிகரமாக வளர்ச்சி அடைந்துள்ளதாக பெர்லினில் இயங்கும் வனவிலங்கு ஆராய்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.🌐