உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில், உகாண்டா மக்கள் சுறுசுறுப்பானவர்கள் என, தெரிய வந்துள்ளது.

உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில், உகாண்டா மக்கள் சுறுசுறுப்பானவர்கள் என, தெரிய வந்துள்ளது. ஆய்வு அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுறுசுறுப்பான மனிதர்கள் பற்றிய ஆய்வு, 168 நாடுகளில் நடத்தப்பட்டது. இதில் உகாண்டா முதலிடம் பெற்றுள்ளது.
உகாண்டாவாசிகள் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கின்றனர். இங்குள்ள, 95 சதவீதம் பேர், உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்துகின்றனர்.இந்தப் பட்டியலில், இந்தியா, 117வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் பெரும்பாலானோர் உடற்பயிற்சி செய்வதில்லை. இதனால், உடல் ரீதியாகமட்டுமின்றி, மனரீதியாகவும் மிக மந்த நிலையில் இருப்போர் அதிகம்.கடைசி இடம் பெற்றுள்ள குவைத் நாட்டில், 68 சதவீதம் பேர், உடற்பயிற்சியை பற்றி நினைத்து கூட பார்ப்பதில்லை.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
@ உகண்டா செய்தி நம்பற மாதிரி இல்லையே!🌐