எஜமானரின் உடலை சுத்தி சுத்தி வந்த நாய்..

எஜமானரின் உடலை சுத்தி சுத்தி வந்த நாய் – வளர்த்த பாசத்தில் நிகழ்ந்த நெகிழ்ச்சியான சம்பவம் ..இறந்து போன தனது எஜமானரின் உடலை சுற்றி சுற்றி வந்த நாய் , யாரையும் அருகில் நெருங்க விடாமல் பாசப் போராட்டம் நடத்தியது . வேலூர்: கடன் தொல்லையால் ராதா வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் .போலீஸார் ராதாவின் சடலத்தை மீட்க வந்தனர் . அப்போது ராதா வளர்த்த நாய் , அவர் சடலத்தின் மீது தலை வைத்து படுத்து கொண்டது . பிணத்தின் அருகே யாரையும் நெருங்க விடாமல் சுற்றி சுற்றி வந்தது . ஒரு வழியாக அந்த நாயை அங்கிருந்து அப்புறப்படுத்தி பின்னர் பிரேத பரிசோதனைக்காக உடலை அனுப்பி வைத்தனர் .
@ நாய் பாசம்!