“என்னை வெச்சு மிஸ்டேக் பண்ணியிருக்காங்க; தப்பு இல்லையா?!” – `சிக்சர்’ சர்ச்சை குறித்து கவுண்டமணி👇🏾

“என்னை வெச்சு மிஸ்டேக் பண்ணியிருக்காங்க; தப்பு இல்லையா?!” – `சிக்சர்’ சர்ச்சை குறித்து கவுண்டமணி👇🏾

1991-ல் பிரபு நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான படம், சின்னத்தம்பி’. அதில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த கவுண்டமணி, இதே குறைபாடு உள்ளவராகத்தான் அப்படத்தில் நடித்திருப்பார். `ரெண்டு மோட்டார் சைக்கிள் வருது குறுக்கால போயிடலாம்னு நினைச்சேன்’ என்று இவர் செய்த காமெடிகளும், படத்தின் வசனங்களும் என்றென்றும் சிரிப்பு. அப்படியான காதாபாத்திரத்தை இமிடேட் செய்யும் வகையிலும், இழிவுபடுத்தும் வகையில் `சிக்சர்’ படத்தில் காட்சிகள் இடம்பெற்றிருப்பது கவுண்டமணி தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

குறிப்பிட்ட அந்தக் காட்சிகளை படத்திலிருந்து நீக்கக்கோரி படத் தயாரிப்பாளருக்கு கவுண்டமணி, வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும், படத்தில் கவுண்டமணியின் புகைப்படம் இடம்பெறும் காட்சியும் இடம்பெற்றிருக்கிறது. இதற்காக தன்னிடம் எந்தவித முன் அனுமதியும் பெறவில்லை என்று கவுண்டமணி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து கவுண்டமணியிடம் பேசினோம்.“என்னைப்பற்றி ஏதோ மிஸ்டேக் பண்ணியிருக்காங்கபோல. அது தப்பு இல்லையா?” என்று சொன்னவரிடம்,“உங்களையும், நீங்கள் நடித்த படங்களையும் நிறைய தமிழ்ப் படங்களில் பயன்படுத்தி இருக்கிறார்களே. திடீரென இப்போது ‘சிக்சர்’ படத்தில் ‘சின்னத்தம்பி’யில் நீங்கள் நடித்த வேடத்தை குறிப்பிட்டமைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருப்பது ஏன்?” என்று கேட்டோம்.

“எனக்கு இன்னும் முழுசாக எதுவும் தெரியவில்லை, நான் நடித்த ‘சின்னத்தம்பி’ படத்தைப் பயன்படுத்தியுள்ள ‘சிக்சர்’ படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. பார்த்த பிறகு உங்களிடம் பேசுகிறேன்” என முடித்துக்கொண்டார்.🌐