எஸ்பிஐ வங்கியில் ரூ.90 கோடி ஸ்வாஹா..

எஸ்பிஐ வங்கியில் ரூ.90 கோடி ஸ்வாஹா.. நீரவ் மோடி பாணியில் மோசடி செய்த விருதுநகர் “இந்துமதி”! இந்துமதி ரிபைனரி பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்திற்கு சொந்த இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ரூ. 90 கோடி வங்கிக் கடன் மோசடி தொடர்பாக தமிழகத்தில் 9 இடங்களில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர்.
@ இந்த நிறுவனம் நீரவ் மோடியை போலவே மோசடி செய்தது என்பதுதான் குறிப்பிடத்தக்கது. நீரவ் மோடி வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில், லோன் எடுக்க இந்தியாவில் இருந்து பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் உத்தரவாத கடிதம் வாங்கி கொடுத்தார். இந்த கடனை நீரவ் மோடி அளிக்க வில்லை என்றால், பஞ்சாப் வங்கிதான் அளிக்க வேண்டும். இதே போல தான் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் உத்தரவாத கடிதம் வாங்கி மோசடி செய்துள்ளது இந்துமதி நிறுவனம்.
@ ஏமாற SBI இருக்கும் போது ஏமாற்ற இன்னும் வருவார்கள்!🌐