சென்னை, ஆவடியில் உள்ள ராணுவ வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் அப்ரன்டிஸ்கள் பணிக்கு ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள் விவரம்:Auto Electrician-2, Carpenter-3, Computer Operator and Programming Assistant-35, Draughtsman (Mechanical)-10, Electrician-20, Fitter-35, Machinist-13, Mechanic (Motor Vehicle)- 15, Turner-7, Welder (G&E)- 6.
கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ தேர்ச்சி. என்சிவிடி அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். (Computer Operator and Programming Assistant, Welder ஆகிய டிரேடுகளுக்கு ஓராண்டு ஐடிஐ படிப்பு போதும். COPA மற்றும் Welder பணிக்கு மாதம் ரூ.8,609ம், கார்பன்டெர் பணிக்கு முதலாண்டு ரூ.8,609ம், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் புரோகிராமிங் அசிஸ்டென்ட் மற்றும் வெல்டருக்கு மாதம் ரூ.8,609ம், மற்ற டிரேடுகளுக்கு மாதம் ரூ.9008ம் பயிற்சி உதவித் தொகையாக வழங்கப்படும்.