ஒன்பிளஸ் 6 அவெஞ்சர்ஸ் எடிஷன் இந்திய விற்பனை துவங்கியது…

ஒன்பிளஸ் 6 அவெஞ்சர்ஸ் லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை துவங்கியது. அமேசான் தளத்தில் மட்டும் இந்த ஸ்மார்ட்போன் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.

புதுடெல்லி:
ஒன்பிளஸ் 6 அவெஞ்சர்ஸ் லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன் இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் ரூ.44,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன் அமேசான் வலைத்தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.
ஆன்லைன் மட்டுமின்றி ஆஃப்லைன் விற்பனை மையங்களிலும் இந்த லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்பட இருக்கிறது. எனினும் ஆஃப்லைன் விற்பனை ஜூன் 3-ம் தேதி துவங்குகிறது.
புதிய லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன் 3D கெவெலர் டெக்ஸ்ச்சர் செய்யப்பட்ட கிளாஸ் பேக் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்டு பாதுகாக்கப்பட்டுகிறது. இந்த கிளாஸ் 6 அடுக்கு ஆப்டிக்கல் கோட்டிங் செய்யப்பட்டு பின்புறம் தங்க நிற அவெஞ்சர்ஸ் லோகோ இடம்பெற்றிருக்கிறது.
இத்துடன் 5 அவெஞ்சர்ஸ் வால்பேப்பர்களும் வழங்கப்படுகிறது. ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனின் அலெர்ட் ஸ்லைடர் தங்க நிறம் கொண்டிருக்கிறது. இத்துடன் லிமிட்டெட் எடிஷனின் ஒவ்வொரு பெட்டியிலும் ஐயன் மேன் கேஸ் வழங்கப்படுகிறது.
மற்றபடி புதிய லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன் மற்றும் ஒன்பிளஸ் 6 சிறப்பம்சங்களில் அதிகப்படியான மாற்றங்கள் செய்யப்படவில்லை. ஒன்பிளஸ் 6 அவெஞ்சர்ஸ் லிமிட்டெட் எடிஷன் மாடல் 8 ஜிபி ரேம், 256 ஜிபி இன்டெர்னல் மெமரி மாடலின் விலை ரூ.44,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 

 
ஒன்பிளஸ் 6 சிறப்பம்சங்கள்:
– 6.28 இன்ச் 2280×1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் 19:9 ரக AMOLED டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– 2.8 ஜிகாஹர்ட்ஸ் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
– அட்ரினோ 630 GPU
– 8 ஜிபி ரேம்
– 256 ஜிபி இன்டெர்னல் மெமரி
– ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியா) மற்றும் ஆக்சிஜன் ஓஎஸ் 5.1
– டூயல் சிம் ஸ்லாட்
– 16 எம்பி + 20 எம்பி பிரைமரி கேமரா
– 16 எம்பி செல்ஃபி கேமரா
– கைரேகை சென்சார்
– வாட்டர் ரெசிஸ்டண்ட்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி போர்ட்
– 3300 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் டேஷ் சார்ஜ்
புதிய ஒன்பிளஸ் 6 அவெஞ்சர்ஸ் லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன் வாங்குவோரில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் மற்றும் டெபி்ட் கார்டுகளை கொண்டு பணம் செலுத்துவோருக்கு ரூ.2000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
இத்துடன் வட்டியில்லா மாத தவனை முறை வசதி, ஐடியா 4ஜி வழங்கும் ரூ.2000 கேஷ்பேக் மற்றும் சர்விஃபை சார்பில் 12 மாதங்களுக்கு டேமேஜ் இன்சூரன்ஸ், ரூ.250 அமேசான் பே பேலன்ஸ் மற்றும் க்ளியர்ட்ரிப் சார்பில் ரூ.25,000 மதிப்புடைய சலுகைகள் வழங்கப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published.