ஒரு ரீசார்ஜ் மூன்று எண்களுக்கு 1 ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல்…

பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்திருக்கும் புதிய சலுகையில் மூன்று நம்பர்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

புதுடெல்லி:
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் புதிய பிராட்பேன்ட் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.1,199 விலையில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய சலுகை ஃபேமிலி பிளான் என அழைக்கப்படுகிறது. இந்த சலுகையில் பிராட்பேன்ட் இன்டர்நெட் மற்றும் மொபைல் டேட்டா உள்ளிட்டவற்றை வழங்குகிறது.
புதிய பிஎஸ்என்எல் ஃபேமிலி சலுகையில் 10Mbps வேகத்தில் பிராட்பேன்ட் இணைப்பு மற்றும் பிஎஸ்என்எல் பிரீபெயிட் கனெக்ஷன்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்தியா முழுக்க அறிவிக்கப்பட்டுள்ள புதிய சலுகையில் 10Mbps பிராட்பேன்ட் இன்டர்நெட் மாதம் 30 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த டேட்டா அளவு கடந்ததும் டேட்டா வேகம் 2Mbps  ஆக குறைக்கப்படும்.
பிஎஸ்என்எல் புதிய சலுகைக்கான அறிவிப்பு அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரீசார்ஜ் செய்யும் போது வாடிக்கையாளர்கள் மூன்று பிஎஸ்என்எல் எண்களை தேர்வு செய்யலாம். ஒவ்வொரு சிம் கார்டிலும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
இந்த சலுகையின் கீழ் வழங்கப்படும் டேட்டா அளவு நிறைவுற்றதும், டேட்டா வேகம் 40Kbps ஆக குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய பிஎஸ்என்எல் சலுகையில் எஸ்எம்எஸ் வசதி வழங்கப்படவில்லை. எனினும், பிரத்யேக ரிங்பேக் டோன் சேவை இலவசமாக வழங்கப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் மூன்று பிஎஸ்என்எல் எண்களில் ஒன்றுக்கு இலவச ஆன்டைன் டிவி சேவை வழங்கப்படுகிறது. மேலும் ஒரு சிம் கார்டுக்கு ஆன்லைன் கல்வியில் ஒரு பாடத்திற்கு ஒருமாத சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.
சமீபத்தில் ஜியோ ஃபைபர் சேவைக்கு போட்டியாக பிஎஸ்என்எல் சார்பில் ஃபைபர் பிராட்பேன்ட் சேவை துவங்கப்பட்டது. இத்துடன் மூன்று FTTH சலுகைகளில் டேட்டா அளவை மும்மடங்கு அதிகரித்தது. ஃபைபர் பிராட்பேன்ட் சலுகைகளில் ரூ.1045, ரூ.1395 மற்றும் ரூ.1895 விலையிலான சலுகைகளில் அதிகபட்சம் 200 ஜிபி டேட்டா கூடுதலாக வழங்குவதாக அறிவித்தது.

Leave a comment

Your email address will not be published.