கடந்த 3 ஆண்டுகளில் ஆந்திராவைச் சேர்ந்த 1656 தொழிலாளர் வளைகுடா நாடுகளில் உயிரிழந்துள்ளனர்.

பல்வேறு நெருக்கடிக்களுக்கு மத்தியில் ஆந்திராவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வளைகுடா நாடுகளில் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் தற்கொலை, உடல்நலக்குறைவு, சாலை விபத்துக்கள் போன்ற காரணங்களால் 2 நாட்களுக்கு 3 பேர் என்ற வீதத்தில் உயிரிழந்து வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளில் ஆந்திராவைச் சேர்ந்த 1656 தொழிலாளர் வளைகுடா நாடுகளில் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் கடப்பா, சித்தூர், கோதாவரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள். இவர்களில் பெரும்பாலும் வீட்டு உதவியாளர் மற்றும் துப்புரவு பணிக்காக சென்றவர்கள். அதிகமானவர்கள் உயிரிழந்த வளைகுடா நாடுகளில் குவைத் முதலிடத்திலும், தொடர்ந்து சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரசு அமீரகம் ஆகியன உள்ளன.  – லோக்சபாவில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளீதரன்