கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 35,000 கன அடி நீர் திறப்பு

பெங்களூரு: கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 35,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து கேரளாவின் வயநாடு, மடிகேரி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கபினி அணை வேகமாக நிரம்பி வருகிறது. கபினி அணைக்கு விநாடிக்கு 37,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து அணையில் இருந்து முன்னெச்சரிக்கையாக தமிழகத்தின் காவிரி ஆற்றில் சுமார் 35,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. கனமழை நீடித்தால், கூடுதலாக நீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடல் மட்டத்திலிருந்து 2,284 அடி உயரம் உள்ள கபினி அணையில் 2,280 அடி தண்ணீர் உள்ளது.

மழை நீடித்தால், நாளைக்குள் அணை நிரம்பிவிடும் என்று மத்திய நீர்ப்பாசன ஆணையம் ஆணையம் தெரிவித்துள்ளது. கபினி அணையில் திறக்கப்படும் நீர் 2 நாட்களில் ஒகேனக்கலில் வந்து சேரும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கபினி அணையிலிருந்து 15,000 கன அடி நீ்ர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, கிருஷ்ணராஜசாகர் அணைக்கான நீர்வரத்து 28,000 கன அடியை தாண்டியுள்ளது. அணையில் இருந்து 394 கன அடி நீர் மட்டுமே பாசனத்திற்காக வெளியேற்றப்பட்டு வருகிறது. 124.8 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ் அணையில் தற்போது, 90.8 அடிக்கு தண்ணீர் உள்ளது. அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியவுடன், வெளியேற்றப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published.