கற்பழிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கியது தொடர்பாக பாதிக்கப்பட்ட அமெரிக்கப்பெண் இந்திய துணை தூதரகத்துக்கு சென்று குற்றம் சாட்டி உள்ளார்

கற்பழிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கியது தொடர்பாக பாதிக்கப்பட்ட அமெரிக்கப்பெண் இந்திய துணை தூதரகத்துக்கு சென்று குற்றம் சாட்டி உள்ளார்.இந்தியாவில் ஊழல் உள்ளதாகவும், பாதிக்ககப்படுகிற பெண்களுக்கு ஆதரவு கிடைப்பதில்லை எனவும் குற்றம் சாட்டி உள்ளார். மேலும், தன்னை பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு தண்டனை கிடைப்பதற்காக தான் பெரும் போராட்டம் நடத்தியதாகவும், இப்போது அவர் தண்டிக்கப்பட்ட நிலையில், ஜாமீன் வழங்கி உள்ளனர் எனவும் கொதித்தெழுந்து இருக்கிறார்.