காமராஜர் பிறந்தாளை முன்னிட்டு நாளை அனைத்து பள்ளிகளும் செயல்படும் என அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடும் வகையில் நாளை அனைத்து பள்ளிகளும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

‘பெருந்தலைவர் `கர்மவீரர்` `கல்விக்கண் திறந்தவர்’ என மக்களால் போற்றப்படும் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாள் நாளை(ஜூலை 15) கொண்டாடப்படுகிறது. இந்த தினம் கடந்த 2006 -ம் ஆண்டு முதல் `கல்வி வளர்ச்சி நாளாக தமிழக அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. காமாராஜரின் பிறந்த நாளில் அனைத்து பள்ளிகளிலும் அவரது உருப்படம் வைக்கப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். பள்ளிகளில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், கட்டுரை, பேச்சுப்போட்டிகளும் நடத்தப்பட்டு, மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு காமராஜரின் பிறந்த நாள் நாளை கொண்டாடப்பட உள்ளது.

பள்ளிகள்

நாளை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்ற போதிலும் கூட, பள்ளிகளில் காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடும் வகையில் மாணவர்கள் பள்ளிகளுக்கு வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளி முதல்வர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் நாளை அனைத்து பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படவேண்டும். இதற்கான செலவினத்துக்கு இடைநிலை கல்வி திட்ட நிதியை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது’ என அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக இன்று(சனிக்கிழமை) விடுமுறை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு பெற்றோர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a comment

Your email address will not be published.