காற்றில் பறக்கும் அரசு உத்தரவு!

🌍 **கொப்பரை தேங்காய்* கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக 99 ரூபாய் 20 பைசா நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும், நாளை முதல் அடுத்த ஆறு மாதங்களுக்கு கொள்முதல் செய்யப்படும் எனவும் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.
@ அதென்ன 99.20 ரூ….. 100ன்னு சொல்லலாமே!🌐*

🌍 *2 ஆயிரத்து 371 கோடி ரூபாய் செலவில், சென்னையில் கூவம் உள்ளிட்ட 3 ஆறுகளை சீரமைக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
@ எலக்‌ஷன் வந்தா நாட்டு மக்களுக்கு நற்செய்திகளாக வரும்!🌐*

🌍 ரேஷன் கடைகளில், அரசு உத்தரவுக்கு மாறாக, பிளாஸ்டிக் கவரில், உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன. தமிழக அரசு, சுற்றுச்சூழலை பாதுகாக்க, பிளாஸ்டிக் கவர் உட்பட, ஒருமுறை பயன்படுத்தி வீசக் கூடிய, பிளாஸ்டிக் பொருட்களுக்கு, இந்தாண்டு ஜனவரி முதல் தடை விதித்துள்ளது. இந்த அறிவிப்பு, 2018ல் வெளியானது. இதனால், ரேஷன் கடைகளில், பிளாஸ்டிக் கவரில், பொருட்களை வழங்க கூடாது எனவும், துணி பையில் மட்டுமே வழங்குமாறும், ஊழியர்களுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டது.
@ காற்றில் பறக்கும் அரசு உத்தரவு!🌐