கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பணிக்குச் செல்லும் பெண்கள் உடல் உபாதைகளால் அவதிப்பட்டு மீண்டும் குடும்ப சிக்கல்கள் சிக்கி வேலையை இழந்து தவிக்கும் அவலம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பணிக்குச் செல்லும் பெண்கள் உடல் உபாதைகளால் அவதிப்பட்டு மீண்டும் குடும்ப சிக்கல்கள் சிக்கி வேலையை இழந்து தவிக்கும் அவலம்

💥கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலைகள், நூற்பாலைகள், செல்போன் கம்பெனிகள்,காலணி தயாரிப்பு தொழிற்சாலைகள் என பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி விட்ட தனியார் நிறுவனங்களால் இதுவரை சுமார் 150 க்கும் மேற்பட்டோர் தொழிற்சாலைகளில் பணி புரிந்தவர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு நோய் நொடியில் சிக்கி பணிக்கு செல்ல இயலாத காரணமாகவும் சிலர் தொடர விருப்பம் இல்லாத காரணங்களாலும் மீண்டும் பெண்கள் வீட்டிற்குள் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது பேரதிர்ச்சி!!!!!

ஊத்தங்கரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெண்களுக்கு நேர்ந்த இந்த உடல்சார் பிரச்சினைகளை தொழிற்சாலை நிறுவனங்கள் மருத்துவ வகையில் எவ்விதத்தில் செயல்படுவது என்பது வெளிச்சத்திற்கு வராமல் போனதன் காரணம் ஏன்????

பெண்களைப் பொறுத்தவரையும் தொழிலாளர்கள் நலன் கருதி தொழிற்சாலைகளும் நிறுவனங்களும் தங்கள் கீழ் வேலை செய்யும் பணியாளர்களுக்கும் குறிப்பாக பெண்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு அம்சங்கள் செய்யப்பட்டுள்ளதா மருத்துவ பரிசோதனை தொடர்ந்து நடைபெறுகின்றதா என்பதை எல்லாம் தொழிலாளர்கள் நலத்துறையும் அரசாங்கமும் கண்காணிப்பதில் சோர்வு இருப்பதாகவும் இதனால் ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் பெண்களுக்கு வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்பட்டு வீட்டுக்குள் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட கூடிய நிலையில் இருந்து காப்பாற்ற மாவட்ட நிர்வாகம் தனியார் தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களிடம் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்பது பெண்கள் நல அமைப்பினர் கோரிக்கையாக உள்ளது.