கிரேட்டர் ஹைதராபாத்தின் ரச்சகொண்டா பொலீஸ் ஆணையர் அலுவலகம் புதிய முறையைக் கையாள்கிறது.

கிரேட்டர் ஹைதராபாத்தின் ரச்சகொண்டா பொலீஸ் ஆணையர் அலுவலகம் புதிய முறையைக் கையாள்கிறது. விதிமீறல் செய்வோருக்கு ஹெல்மெட் வாங்குவதற்கும் ஆவணங்கள் இல்லாமல் வருவோருக்கு ஆவணங்களைப் பெற்றுத்தருவதற்கும் வசதிகள் செய்து கொடுத்து நாட்டிற்கு ஒரு பாடமாக விளங்குகிறது.இதற்கான நடைமுறையை சனிக்கிழமையன்று போக்குவரத்து போலீஸ் உதவி ஆணையர் திவ்யா சரண் ராவ் அறிமுகம் செய்தார். போக்குவரத்து விதிமீறல் செய்வோர் அந்த இடத்திலேயே ஹெல்மெட் வாங்குவதற்கும் மாசுக்கட்டுப்பாட்டு மற்றும் காப்பீடு ஆவணங்கள் இல்லாதவர்களுக்கு அதனைப்பெற்றுத் தர வசதிகளையும் ஆந்திர போலீஸ் செய்து தந்து புதிய முறையை கையாண்டு வருகிறது.
@ லைசென்ஸ் இல்லாதவர்களுக்கு ஆன்லைனின் புக்கிங் உள்ளிட்ட வசதிகளும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.🌐