குஜராத் கலவரத்தின் போது பாதிக்கப்பட்டு கை எடுத்து கும்பிட்டு கலங்கிய கண்களோடு சிதைந்து போய் நின்ற குதுபுத்தீன்

குஜராத் கலவரத்தின் போது பாதிக்கப்பட்டு கை எடுத்து கும்பிட்டு கலங்கிய கண்களோடு சிதைந்து போய் நின்ற குதுபுத்தீன் அன்சாரியை யாரும் மறக்க மாட்டார்கள்.அதே கலவரத்தில் மதவெறி ஊட்டப்பட்டு கொலை வெறியில் கையில் கத்தியும்,தலையில் காவி துணியுமாக நின்ற அசோக் பர்மரையும் யாரும் மறக்க மாட்டார்கள்.

இத்தனை ஆண்டுகள் கழிந்து வாழ்க்கையில் பல நிலைமைகளையும் கடந்து இன்று எந்த மதவெறி அவர்களை பிரித்ததோ அதற்கு எதிராக பேச வந்து நிற்கிறார்கள்……அசோக் பர்மரின் புதிய செருப்பு கடையை திறந்து வைக்க வந்திருப்பது,அன்சாரி அவர்கள்…..
மத வெறி எதையுமே தரவில்லை இழப்பை தவிர என்கிறார்கள்…
மனிய நேயம் வளப்போம்….
சாதி,மதம் கடந்து மக்கள் ஒற்றுமை ஓங்குக…🔴