குடியரசு தின விழாவில் பங்கேற்க டிரம்பிற்கு இந்தியா அழைப்பு

புதுடெல்லி,
2019-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்ற இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில் இந்தியாவின் அழைப்பை ஏற்று அதிபர் டிரம்ப் வந்தால், கடந்த சில வருடங்களுக்கு பிறகு இரு நாடுகளுக்கிடையே மிகப்பெரிய வெளியுறவு கொள்கை ஏற்படும் எனத் தெரிகிறது.
கடந்த ஏப்ரல் மாதமே அமெரிக்க அதிபருக்கு இந்தியா தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அமெரிக்காவின் பதிலை இந்தியா எதிர்நோக்கி காத்திருக்கிறது. இதனிடையே அதிபர் டிரம்ப் இந்திய அரசின் அழைப்பு குறித்து பரிசீலித்து வருவதாகவும், அவர் கலந்து கொள்வதற்காக வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. கடந்த 2015ஆம் ஆண்டு மோடி தலைமையில் முதல் முறையாக நடைபெற்ற குடியரசு தின விழாவில் முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஓபாமா பங்கேற்றது போல், தற்போது டிரம்ப்பும் பங்கேற்றால் இரு நாடுகளுக்கிடையே அதிகபடி ஒப்பந்தங்கள் உறுதியாகும் என நம்பப்படுகிறது. மேலும் வர்த்தக ரீதியான உடன்பாடுகள், ஈரான் விவகாரம் போன்றவற்றால் இந்தியா, அமெரிக்கா நாடுகளுக்கிடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் குடியரசு தின விழாவில் அதிபர் டிரம்ப்புக்கான அழைப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published.