கேரளாவில் ஒன்றரை வயது குழந்தையின் கையை தாய் இறுக பிடித்தபடி இறந்து கிடந்த உடல்களை கண்டு மீட்பு குழுவினர் கண் கலங்கினர்.

கேரளாவில் ஒன்றரை வயது குழந்தையின் கையை தாய் இறுக பிடித்தபடி இறந்து கிடந்த உடல்களை கண்டு மீட்பு குழுவினர் கண் கலங்கினர். கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சம்பவங்களில் சிக்கி இதுவரை 76 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் வீடு மற்றும் உடமைகளை இழந்துள்ளனர். 2.87 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். காணாமல் போன 58 பேரில் 50 பேர் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர்கள். இந்த பகுதியில் 24 பேர் பலியாகி உள்ளனர். இது கேரளாவில் மிக அதிக எண்ணிக்கையாகும்.🌐