கேரள மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழைக்கு இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 34 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கெடுத்துள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அங்கிருந்தவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
பலத்த மழையின் காரண மாக இதுவரை 12 பேர் பலியாகி யுள்ளனர். கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருவதால் பல ஆறுகளில் வெள்ள அபாயத்தை தாண்டி வெள்ளம் செல்கிறது. மழையின் காரணமாக 36 வீடுகள் முழுவதுமாக இடிந்து விழுந்துள்ளன. 1,214 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
பல இடங்களில் வெள்ளம் வடியாததால் ஏராளமானோர் நிவாரண முகாம்களில் தங்கியுள் ளனர். அவர்களால் தங்களது இருப்பிடத்துக்கு திரும்ப முடியாத நிலை உள்ளது.
மழையால் கோட்டம், ஆலப் புழா மாவட்டங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள பள்ளி, கல்லூரிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் கடந்த 2 நாட் களாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள் ளது.
மழையின் காரணமாக சாலைகள் மோசமாக பாதிக்கப் பட்டுள்ளன. ஜூலை 19-ம் தேதி வரை பலத்த மழை நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.