நிபா வைரஸ் காரணமாக கேரள மாநிலத்திலிருந்து வரும் பொருட்களுக்கு சவுதி அரேபியா நாடு தடை விதித்துள்ளது.
கேரளாவிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு பழங்கள், பதப்படுத்தப்பட்ட பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த நிலையில் கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்பால் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

நிபா வைரஸ் அச்சம் காரணமாக கேரளாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு சவுதி அரேபியா தடை விதித்துள்ளது. இதேபோல ஐக்கிய அரபு அமீரகமும் (யுஏஇ) கேரளப் பொருட்களுக்குத் தடை விதித்துள்ளது.
கடந்த மே 29-ம் தேதி முதல் இந்த தடை ஐக்கிய அரபு அமீரக நாட்டில் அமலுக்கு வந்துள்ளது.
கேரளாவிலிருந்து அனுப்பப்பட்ட 100 டன் எடை கொண்ட பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.