கொடுமை!

ரயில்வே கோட்டத்தில் தண்டவாள விபத்தில் திருப்பூர் முதலிடம் பிடித்து வேதனையான சாதனையை சொந்தமாக்கியுள்ளது.தெற்கு ரயில்வே உட்பட்ட சேலம் கோட்டத்தில், ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்று ரயில் மோதி பலியாகிறவர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி, ரயில் தண்டவாளங்களை கடப்பவரில், 80 சதவீதம், ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பவர்கள், 9.7 சதவீதம், ரயில், பிளாட்பார்மில் மரணம் அடைவோர், 2.5 சதவீதம், பிற சம்பவங்களில், ஏழு சதவீதம் பேர் இறக்கின்றனர்.சேலம் கோட்ட அளவில் கடந்த இரண்டு ஆண்டில், 939 சம்பவங்கள் நடந்துள்ளது. இதில், 924 பேர் பலியாகியுள்ளனர். இவர்களில், 650 பேர் ரயில் மோதி இறந்துள்ளனர்.
கொடுமை!