@ கோவையில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்தது  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தில், வயநாடு, பாட்டவயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், பன்றிக்காய்ச்சல் பாதிப்பு, அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து அப்பகுதியில், சுகாதார துறையினர், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கேரளாவுக்கு அருகில் உள்ள நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய  மாவட்டங்களில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இம்மாவட்ட சுகாதார துறையினர், உஷார்படுத்தப்பட்டு பன்றிக்காய்ச்சல் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
@ கோவையில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்தது  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.