கோவை, நீலகிரி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்யும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கோவை, நீலகிரி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்யும் கனமழையால், பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கால்வாய்களில் தண்ணீர் பெருக்கெடுத்து சாலைகளில் பாய்வதால் வாகனப் போக்குவரத்து பல இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மலை சார்ந்த பகுதிகள் ரம்மியமாக காட்சி தருகின்றன.
கனமழை காரணமாக இரும்பு பாலம் என்ற இடத்தில் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மூன்று தாலுகாக்களில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது.🌐