சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர்

சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் போது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், தகவல் தொடர்பை மீட்பதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். வாய்ப்புகளும், நம்பிக்கைகளும் குறைந்து வரும் நிலையில் நாசா விஞ்ஞானிகளும் இஸ்ரோவுக்கு உதவியாக விக்ரமின் சமிக்ஞைகளை பெற முயற்சி மேற்கொண்டு தங்கள் விண் ஆய்வு நிலைய ஆன்டெனாக்கள் மூலமாக அதற்கு ஹலோ ஹலோ என தகவல்களை அனுப்பி கொண்டிருக்கின்றனர். இதை தொடர்ந்து சூரிய ஒளிக்கதிர்கள் படும் நிலையில் விக்ரம் லெண்டரிலிருந்து 14 நாட்கள் வரை சமிக்ஞைகள் பெற முயற்சிகள் தொடர்ந்து நடைபெறும். லெண்டருக்கு சிக்னல் அனுப்பப்படும் போது நிலவு ஒரு வானொலி அலைவரிசையை போல சிறிய அளவிலான சிக்னலை திருப்பி அனுப்புகிறது.
@ முயற்சி நல்ல பலன் தர வேண்டுமே!🌐