சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் தர்ம அடி வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஃபேஸ் புக்கில் லைவ் அடித்து சேலம் பாஜக அலுவலகத்திற்கு வாலண்டரியாக சென்று சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் தர்ம அடி வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேலத்தில் உள்ள குளங்களையெல்லாம் கெடுத்து வைத்திருக்கிறார் என பியூஷ் மீது கோபப்பட்டனர். நீ ராஜஸ்தானில் இருந்து வந்த வந்தேறி. உனக்கு எப்படி வருமானம் வந்தது? எனக் கேட்கின்றனர். அதற்கு பதிலளித்த பியூஷ் மானுஷ். நான் ராஜஸ்தானில் இருந்து வந்தாலும் நான் பிறந்தது இங்கு தான். நான் விவசாயம் செய்து சம்பாதிக்கிறேன். நான் வந்தேறி என்றால் மோடி- அமித் ஷா எல்லாம் வந்தேறிகளா? என பியூஷ் மானுஷ் கேள்வி கேட்டார். விவாதம் அப்ப்டியே இருவருக்கும் முற்ற ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த பாஜக தொண்டர்கள் பியூஷ் மானுஷுக்கு செருப்பு மாலை அணிவித்து வெறுப்பேற்றினர். இதுதான் பாஜக தொண்டர்களின் லட்சணம் என கூறினார்.🌐