சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கேழ்வரகு ரவா தோசை

சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்கள் தினமும் கேழ்வரகை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று கேழ்வரகு, ரவை சேர்த்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

கேழ்வரகு மாவு – 1 கப்
அரிசி மாவு – கால் கப்
ரவை – அரை கப்
ப.மிளகாய் – 1
வெங்காயம் – 1
கறிவேப்பிலை – சிறிதளவு
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவைக்கு

செய்முறை :

ப.மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மிளகை இரண்டாக பொடித்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, அரிசி மாவு, ரவை, பொடியாக நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை, சீரகம், மிளகு, உப்பு, தண்ணீர் சேர்த்து தோசை மாவை விட சற்று தளர்வாக கரைத்து கொள்ளவும்.

கரைத்த மாவை அரை மணிநேரம் அப்படியே வைக்கவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை பரவலாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

சத்து நிறைந்த கேழ்வரகு ரவா தோசை ரெடி.

Leave a comment

Your email address will not be published.