சாம்சங் புதிய கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

சாம்சங் நிறுவனத்தின் 2018 கேலக்ஸி ஜெ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய ஸ்மார்ட்போன்களின் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

நியூ யார்க்:
சாம்சங் நிறுவனத்தின் 2018 கேலக்ஸி ஜெ3 மற்றும் ஜெ7 ஸ்மார்ட்போன்கள் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
புதிய ஸ்மார்ட்போன்களில் 5.0 இன்ச் மற்றும் 5.5 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளன. 2018 கேலக்ஸி ஜெ3 ஸ்மார்ட்போனில் 8 எம்பி பிரைமரி கேமரா, f/1.9 அப்ரேச்சர், 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்கள் அறிவிக்கப்படவில்லை.
எனினும் கீக்பென்ச் தளத்தில் வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போனில் குவாட்கோர் எக்சைனோஸ் 7570 14என்எம் சிப்செட், 2 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இதன் பேட்டரி திறன் குறித்து எவ்வித தகவலும் இல்லை.
2018 கேலக்ஸி ஜெ7 ஸ்மார்ட்போனில் 13 எம்பி பிரைமரி கேமரா, f/1.7 அப்ரேச்சர், 13 எம்பி செல்ஃபி கேமரா, f/1.9 அப்ரேச்சர் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் மற்ற சிறப்பம்சங்கள் குறித்து எவ்வித தகவலும் இல்லை.
 

 
சாம்சங் கேலக்ஸி ஜெ3 (2018) சிறப்பம்சங்கள்:
– 5.0 இன்ச் 1280×720 பிக்சல் ஹெச்டி டிஸ்ப்ளே
– 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் எக்சைனோஸ் 7570 14nm பிராசஸர்
– மாலி-T720 MP1
– 2 ஜிபி ரேம்
– 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
– டூயல் சிம் ஸ்லாட்
– 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.9 அப்ரேச்சர்
– 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2 அப்ரேச்சர்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2
சாம்சங் 2018 கேலக்ஸி ஜெ3 மற்றும் 2018 கேலக்ஸி ஜெ7 ஸ்மார்ட்போன்கள் அமெரிக்காவில் ஜூன் மாத வாக்கில் விற்பனைக்கு வரும் என சாம்சங் தெரிவித்துள்ளது.
முன்னதாக மார்ச் மாத வாக்கில் பிரபல ஸ்மார்ட்போன் டிப்ஸ்டர் எவான் பிளாஸ் வெளியிட்டிருந்த தகவல்களில் கேலக்ஸி ஜெ3 (SM-J337A) மற்றும் கேலக்ஸி ஜெ7 (SM-J337V) ஸ்மார்ட்போன்கள் வெரிசான் மற்றும் கேலக்ஸி ஜெ7 ஏரோ மற்றும் கேலக்ஸி ஜெ3 எக்லிப்ஸ் 2 என்ற பெயர்களில் விற்பனைக்கு வரலாம் என தெரிவித்திருந்தார்.
எனினும் வரும் நாட்களில் இது குறித்த முழு விவரங்கள் மற்றும் இரண்டு ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் இதர சந்தைகளில் வெளியிடுவது குறித்த தகவல்கள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published.