சிறையில் உள்ள கைதிகள் தயாரிக்கும் ‘பிரியாணி காம்போ ரூ.127’ பேக்கேஜ் ஆன்லைனில் அமோக விற்பனையாகி வருகிறது.

கேரளா மாநிலத்தின் சிறையில் உள்ள கைதிகள் தயாரிக்கும் ‘பிரியாணி காம்போ ரூ.127’ பேக்கேஜ் ஆன்லைனில் அமோக விற்பனையாகி வருகிறது. சிறைக்கைதிகளின் சப்பாத்திகளுக்கு அப்பகுதியில் நல்ல வரவேற்பு கிடைக்கவே, பேக்கரி வகைகள், அசைவ குழம்பு வகைகள் மற்றும் பிரியாணி ஆகியவை சமைத்து வைத்து சிறையில் உள்ள கவுண்டர்களில் விற்பனை செய்ய தொடங்கினர். நல்ல வரவேற்பு கிடைக்கவே, பேக்கரி வகைகள், அசைவ குழம்பு வகைகள் மற்றும் பிரியாணி ஆகியவை சமைத்து வைத்து சிறையில் உள்ள கவுண்டர்களில் விற்பனை செய்ய தொடங்கினர். 500 கிராம் பிரியாணி, சிக்கன் லெக் பீஸ், 3 சப்பாத்திகள்
ஒரு கப் கேக், சாஸ், ஊறுகாய், ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் ஆகியவை வழங்கப்படுகின்றன. இவ்வளவு குறைந்த விலையில் இத்தனை வகைகளா? என கேரள மக்கள் ஆன்லைனில் ஆர்டர்களை குவித்து வருகின்றனர். இந்த வரவேற்பை கண்டு சிறை நிர்வாகமும், கைதிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர்🌐