சீனா : சீனாவில் பீஜிங் மற்றும் ஹாங்காய் நகரங்களுக்கு இடையே புல்லட் ரயில் சேவை தொடங்கியது. இரு நகரங்களுக்கும் இடையேயான 1318 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஜி7 என்று பெயரிடப்பட்ட புல்லட் ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த ரயில் சேவை மணிக்கு 350 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும்.
இந்த ரயில் 3.30 மணி நேரத்தில் பீஜிங்கிலிருந்து ஹாங்காய் நகரத்திற்கு சென்றடையும். 400 மீட்டர் நீளத்தில் 16 பெட்டிகளுடன் இருக்கும் ஜி7 ரயிலில் ஒரே நேரத்தில் 1200 பேர் பயணிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
சீனாவில் பீஜிங் மற்றும் ஹாங்காய் நகரங்களுக்கு இடையே புல்லட் ரயில் சேவை
