@ சுஷ்மாவின் கடைசி நிமிடங்கள்!

இந்தியாவிற்காக உளவு பார்த்து, பாக்., ராணுவத்தால் கைது செய்யப்பட்டு, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர் குல்பூசன் ஜாதவ். இவரை மீட்க சர்வதேச கோர்ட்டில் இந்தியா முறையிட்டு, வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் இந்தியா சார்பில் ஆஜராகி வாதாடி வருபவர் ஹரிஷ் சால்வி. மாரடைப்பு ஏற்படுவதற்கு முன் ஹரிசை தொடர்பு கொண்ட சுஷ்மா, குல்பூஷன் வழக்கு விபரம் குறித்து விசாரித்துள்ளார். பிறகு, உங்களின் கட்டணமான ரூ.1 ஐ நாளை (ஆக.,07) மாலை 6 மணிக்கு வந்து பெற்றுக் கொள்ளுங்கள் என ஹரிசிடம் சுஷ்மா கூறி உள்ளார். இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய ஹரிஷ், நான் இரவு 8.50 மணிக்கு சுஷ்மாவிடம் பேசினேன். மிகவும் உணர்சிபூர்வமான உரையாடல் அது. நீங்கள் வந்து என்னை சந்தியுங்கள் என என்னிடம் கூறினார். இந்த வழக்கில் நீங்கள் வெற்றி பெற்றதற்காக நான் உங்களுக்கு அளிக்க வேண்டிய ரூ.1 ஐ தர வேண்டும். அந்த மதிப்பு மிக்க கட்டணத்தை நானே வந்து பெற்றுக் கொள்கிறேன் என அவரிடம் கூறினேன். நாளை மாலை 6 மணிக்கு வாருங்கள் என என்னிடம் கூறினார். அவரிடம் பேசி முடித்த சிறிது நேரத்திலேயே மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாக வந்த செய்தி கேட்டு, அதிர்ச்சியில் உறைந்து போனேன் என்றார்.🌐
👆(இந்தியாவுக்காக வாதாடுவதால் பெயருக்கு ரூ.1 மட்டுமே கட்டணமாக பெறுகிறார் சால்வே.)
@ சுஷ்மாவின் கடைசி நிமிடங்கள்!