தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் கொட்டித் தீர்த்து வருகிறது. தமிழகத்திலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய பகுதிகளான கோவை, நீலகிரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து வருகிறது. அதே நேரத்தில் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் பல இடங்களிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோடை மழை ஏமாற்றிய சென்னையில் கடந்த மூன்று நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
வெப்பம் தணிந்தது இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது. இன்றும் காலை முதலே சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது. இன்றும் காலை முதலே சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
இன்றும் மழைக்கு வாய்ப்பு அவ்வப்போது குளிர்ந்த காற்று வீசி இதமளித்து வருகிறது. இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை சென்னையில் மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை தென் தமிழகத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வட கடலோர மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.