சென்னை மற்றும் தமிழகம்… ரியல் எஸ்டேட் எப்படி இருக்கிறது?

டந்த சில ஆண்டுகளாக மந்தநிலையில் காணப்படும் சென்னை ரியல் எஸ்டேட் நிலவரம் இப்போது எப்படி இருக்கிறது என்பது குறித்து சென்னையைச் சேர்ந்த முதலீட்டு ஆலோசனை நிறுவனமான ஸ்பார்க் கேப்பிட்டல் (Spark   Capital) ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின் முக்கியப் பகுதிகள் இனி…

கடந்த ஐந்து, ஆறு ஆண்டுகளாக இந்திய ரியல் எஸ்டேட் மந்தநிலையில் காணப்பட்டது. இதற்குக் காரணங்கள் பல. குறைந்த அளவிலான தேவை, விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கும் ஃப்ளாட் களின் எண்ணிக்கை உயர்வு, வாங்க முடியாத அளவுக்கு அதிக விலை, ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் மோசமான செயல்பாடுகள், குறைந்த அளவில் தேவைப்படும் இரண்டு மற்றும் மூன்று படுக்கை அறைகள் கொண்ட வீடுகளை அதிகமாகக் கட்டியது போன்றவை.

இந்திய அளவில் ரியல் எஸ்டேட் சுணக்கமான நிலையில் இருக்கும்போது, சென்னை மற்றும் தமிழ்நாட்டின் ரியல் எஸ்டேட் விதிவிலக்காக அமைய வாய்ப்பில்லை.

வளர்ச்சியை வீழ்த்திய மூன்று விஷயங்கள்

கடந்த ஆறு ஆண்டுகளில் ரியல் எஸ்டேட்டுக்கான தேவை தொடர்ந்து வீழ்ச்சி கண்டது. அதுவும் 2016-17-ம் ஆண்டில், கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு வீடுகளின் தேவை மிகவும் குறைவாக இருந்தது.     2012-ம் ஆண்டின் உச்சத்திலிருந்து  வீடுகளுக்கான தேவை 40% குறைந்து காணப்பட்டது. பணமதிப்பு நீக்கம், ரெரா (RERA), ஜி.எஸ்.டி வரி நடைமுறைக்கு வந்தது போன்ற மூன்று விஷயங்களால் 2017-ம் ஆண்டில் ரியல் எஸ்டேட்டுக்கான தேவை மிகவும் குறைந்து காணப்பட்டது.

தேவை குறைந்ததால், 2017-ம் ஆண்டில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் புதிய புராஜெக்ட்கள் அறிமுகம் குறைந்துள்ளது. தற்போது, ரெரா மற்றும் ஜி.எஸ்.டி வரி நடைமுறைக்கு வந்தபின் ரியல் எஸ்டேட் துறை எப்படி வளர்ச்சி காணப்போகிறது என்பதைப் பார்த்துவிட்டு, புதிய புராஜெக்ட்டு களில் இறங்கலாம் என்று சில டெவலப்பர்கள் காத்திருக் கிறார்கள்.

விற்காமல் தேங்கிக் கிடக்கும் வீடுகள் 

டயர் 1 நகரங்களில் கடந்த ஏழு ஆண்டுகளில் விற்காமல் தேங்கிக் கிடக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது. அதாவது, 2010-ம் ஆண்டில் விற்காத ஃப்ளாட்கள் 4,11,000-ஆக இருந்தது. இது 2017-ல் 8,05,000-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையைப் பொறுத்த வரையில், கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் விற்பதற்குச் சராசரியாக 41 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றன.

விலை அதிகரிக்கவில்லை 

கடந்த 2005-ம் ஆண்டிலிருந்து 2012-ம் ஆண்டு வரை குடியிருப்பு களின் விலை மிகவும் வேகமாக அதிகரித்தது. அதன்பிறகு, இப்போது வரைக்கும் தேக்க நிலையில்தான் காணப்படுகிறது. கடந்த ஐந்தாண்டுகளாக விலை அதிகரிப்பானது பணவீக்க உயர்வு என்கிற அளவுக்குக்கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

12,278 comments