சோமாலியா நாட்டில் ராணுவ தளம் ஒன்றில் நடந்த கார் குண்டு தாக்குதலில், படை வீரர்கள் 7 பேர் படுகாயம்

சோமாலியா நாட்டில் ராணுவ தளம் ஒன்றில் நடந்த கார் குண்டு தாக்குதலில், படை வீரர்கள் 7 பேர் படுகாயம் அடைந்தனர்
* ஈராக் நாட்டில் தியாலா மாகாணத்தில் உள்ள சந்தையில் நேற்று முன்தினம் நடந்த குண்டுவெடிப்பில் 2 பேர் உயிரிழந்தனர். 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
* சோமாலியா நாட்டில் ராணுவ தளம் ஒன்றில் நடந்த கார் குண்டு தாக்குதலில், படை வீரர்கள் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
* அமெரிக்கா தனது கொள்கைகளை பிற நாடுகள் மீது திணிப்பது அனைவருக்கும் அச்சுறுத்தலாக அமைந்து உள்ளது என ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி குற்றம் சாட்டி உள்ளார்.
* சிங்கப்பூரில் நாளை அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேச உள்ள உச்சி மாநாடு வெற்றி பெறவும், கொரிய தீபகற்பத்தில் அமைதி தவழவும் பிரார்த்திப்பதாக போப் ஆண்டவர் பிரான்சிஸ் கூறி இருக்கிறார்.
* சிரியாவில் ஷியா பிரிவு மக்கள் பெருவாரியாக வாழ்கிற 2 கிராமங்களை கிளர்ச்சியாளர்கள் முற்றுகையிட்டு புதிய தாக்குதலில் ஈடுபட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Leave a comment

Your email address will not be published.