ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட ஜாகுவார் படை வீரர்கள் 6 பேர் கண்ணிவெடியில் சிக்கி வீரமரணம் அடைந்துள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலம் கர்வா மாவட்டம் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். இப்பகுதியில் மாவோயிஸ்டுகளை தடுக்க மாநில அரசால் ஜாக்குவார் என்ற சிறப்பு போலீஸ் படை உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கர்வா மாவட்டத்தின் சின்ஜோ என்ற பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு ஜாக்குவார் படையினர் 15 பேர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது மாவோயிஸ்டுகள் வைத்திருந்த கண்ணிவெடி வெடித்ததில் 6 வீரர்கள் சம்பவ இடத்திலேயே வீரமரணம் அடைந்தனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து படுகாயமடைந்த 9 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவோயிஸ்டுகள் திட்டமிட்டு இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக ஜார்க்கண்ட் காவல்துறை ஐ.ஜி தெரிவித்துள்ளார். மேலும் மாவோயிஸ்டுகளை கட்டுப்படுத்த உரிய நடவரிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். கண்ணிவெடியில் சிக்கி 6 வீரர்கள் வீரமரணம் அடைந்ததை தொடர்ந்து, அப்பகுதியில் கூடுகள் படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
ஜார்க்கண்ட்டில் மாவோயிஸ்டுகள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி 6 ஜாக்குவார் வீரர்கள் வீரமரணம்
