கூகுள் நிறுவனம் ஜி.மெயில் பயனர்களுக்கு வழங்கியுள்ள புதிய வசதியில் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளது என்று இங்கிலாந்து நாட்டில் வெளியாகும் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.
கூகுள் நிறுவனம் அதன் பயனர்களை கவரும் வகையில் தொடர்ச்சியாக புதுப் புது அப்டேட்களை வழங்கிவருகிறது. அந்த வகையில், ஏப்ரல் மாதத்தில் ஜி.மெயிலில் புதிய அப்டேட் வழங்கப்பட்டது. அதன்படி, ஜி.மெயிலில் அக்கௌண்ட் வைத்திருக்கும் பயனர்களுக்கு வரும் மெசேஜ்களை ஜி.மெயில் தானாக கையாளும் வகையில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. அதற்கு கான்ப்டென்ஷியல் மோட்(Confidential Mode) என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில், ஜி மெயில் பயனாளர்களுக்கு வரும் மெசேஜ்கள், ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தாமாகவே அழிந்துவிடும் வசதி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
ஜி மெயிலின் கான்பிடென்ஷியல் மோட் வசதியில் பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பதாக இங்கிலாந்திலிருந்து வெளிவரும் எக்ஸ்பிரஸ். கோ.யூகே என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டது. இதுகுறித்து தெரிவித்த அமெரிக்காவின் ஹோம்லேண்டு பாதுகாப்புத்துறை, ‘உளவுத்துறை விவரங்கள் தொடர்பாக நாங்கள், கூகுள் நிறுவனத்திடம் பேசியுள்ளோம். இருவரும் இணைந்து இணைய பாதுகாப்பை அதிகரிப்பது குறித்து ஆலோசனை நடத்தியிருப்பதாகத் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து தெரிவித்த கூகுள் நிறுவனம், ‘ஜி.மெயில் பயனர்களின் தகவல்களை பாதுகாப்பதில் கூகுள் உறுதியாகவுள்ளது. இணைய குற்றவாளிகளைக் கண்டுபிடித்து பாதுகாப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக முயற்சிகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருவதாகவும் கூகுள் விளக்கமளித்துள்ளது.