ஜெயலலிதாவின் இஷ்ட மற்றும் முதன்மை தெய்வம் பெருமாள்.

ஜெயலலிதாவின் இஷ்ட மற்றும் முதன்மை தெய்வம் பெருமாள்.
தன்னை காப்பவரும், வழி நடத்துபவரும் அவரே என எண்ணினார். அதனால்தான் தனக்கு பாதுகாவல் அரண்களாக நிற்கும் பி.எஸ்.ஓ. போலீஸாரை பெருமாளின் அவதார பெயர் உடையவர்களாக பார்த்து நிறுத்திக் கொண்டார். ஜெயலலிதாவை சுற்றி நிற்கும் பி.எஸ்.ஓ.க்களின் பெயர்களை கவனித்தால்….பெருமாள் சாமி, வீரபெருமாள் என்று தான் இருக்கும். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு ஏற்ப இவர்களும் ஒவ்வொரு நொடியும் தங்களின் உயிர்த்துடிப்பை, ஜெ.,வுக்காகவே அர்ப்பணித்துதான் வந்தனர். ஜெ., வெளியிடங்களுக்கு வரும்போதெல்லாம் அவரை மொய்க்கும் கேமெராக்களின் கண்களில் இவர்களும் விழுந்து, விழுந்து பெயர் தெரியாவிட்டாலும் கூட மக்களின் மனதில் மிக பரிச்சயமானார்கள்.