டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 19 காசுகள் உயர்வு

மும்பை: இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 19 காசுகள் உயர்ந்து ரூ.68.65 காசுகளாக உள்ளது. வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களிடையே அமெரிக்க டாலரின் தேவை சரிந்துள்ளது, உலகளவில் மற்ற நாணயங்களுக்கு எதிரான டாலரின் பலவீனம் மற்றும் உள்நாட்டு பங்குச்சந்தையில் காணப்படும் உயர்வு போன்ற காரணங்களால் இந்திய ரூபாயின் மதிப்பில் உயர்வு காணப்படுவதாக அந்நிய செலாவணி விநியோகஸ்தர் தெரிவித்துள்ளார். கடந்த வர்த்தகத்தில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 21 காசுகள் அதிகரித்து ரூ.68.84 காசுகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது

Leave a comment

Your email address will not be published.