மகாராஷ்டிராவில் விவசாயிகளின் பேரணி வெற்றி பெற்றதை தொடர்ந்து, டெல்லியிலும் இதுபோன்ற பேரணி நடத்த அகில இந்திய விவசாயிகள் சங்கம் (ஏஐகேஎஸ்) திட்டமிட்டுள்ளது.
ஏஐகேஎஸ் அமைப்பின் மத்திய நிர்வாகிகள் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த அமைப்பின் பொதுச் செயலாளர் ஹன்னன் மொல்லா கூறும்போது, “நாட்டில் தற்போது நிலவும் வேளாண் நெருக்கடி குறித்து விவாதிப்பதற்கு என நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட வேண்டும்.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி டெல்லியில் நீண்ட பேரணி செல்லும் யோசனையை ஆதரிக்க முடிவு செய்துள்ளோம். பிற அமைப்புகளுடன் ஆலோசித்த பிறகு பேரணிக்கான தேதி அறிவிக்கப்படும். செப்டம்பர் 5-ம் தேதிக்கு பிறகு இந்தப் பேரணி எப்போது வேண்டுமானாலும் நடைபெறலாம் ” என்றார்.