டோக்லாமில் இனி சீனா வாலாட்ட முடியாது… ‘புதிய பாதை’ யால் மிரட்டிய இந்தியா!

டோக்லாமில் இனி சீனா வாலாட்ட முடியாது… ‘புதிய பாதை’ யால் மிரட்டிய இந்தியா!

இந்திய ராணுவம், சீன எல்லையில் டோக்லாம் பீடபூமியை எளிதில் சென்றடையும் விதமாக, புதிய சாலையை இந்தியா அமைத்துள்ளது. இதனால் டோக்லாம் பகுதியை அடைய முன்பிருந்த 7 மணி நேர பயணம் என்பது 40 நிமிடமாக குறைந்துள்ளது.

சிக்கிம் மாநில எல்லைக்கு அருகே சீன ராணுவம் அவ்வப்போது படைகளை குவித்து, இந்தியாவை அச்சுறுத்தி வந்தது. அத்துடன் எல்லை பகுதியான டோக்லாமில், போர்க்கருவிகளை குவிப்பதற்கு வசதியாக சாலை அமைக்கும் பணியையும் சீனா மேற்கொண்டு வந்தது. இதற்கு இந்தியா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக 2018 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவின் உகான் நகரில் நடந்த மாநாட்டின் போது சந்தித்து கொண்ட இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஷின் ஷிங்பிங் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.இந்த ஆலோசனையின் முடிவாக எல்லையில் இருந்து இரு நாட்டு படைகளும் விலக்கிக் கொள்ளப்பட்டன.

13,000 அடி உயரத்தில் அமைந்துள்ள டோக்லாமில் அமைதியை உறுதி செய்யும் வகையில், இந்தியா-சீனா வீரர்கள் தினமும் காலை 8.30 மணிக்கு சுமார் 15 நிமிடங்கள் டீ குடித்தபடி அமைதி குறித்து பேசுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.

2017 ம் ஆண்டிற்கு பிறகு டோக்லாமில் புதிதாக சாலை அமைக்கும் பணி எதையும் சீனா மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில் இதுவரை டோக்லாம் எல்லைக்கு படைகள் செல்ல கடினமாக இருந்த பயணத்தை எளிதாக்க எல்லையில் சாலை அமைத்துள்ளது இந்தியா.

ஏற்கனவே 10 கி.மீ., தொலைவிற்கான சாலைபணிகள் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள 20 கி.மீ.,க்கும் அதிகமான சாலை பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடைய உள்ளது. அனைத்து காலநிலைக்கும் தாங்கக் கூடிய வகையிலான டோக்லாம் பிளாக் ஹில் – டோக்லாம் ஆக்சிஸ் இடையேயான சாலை 2020 க்குள் முடிக்கப்பட உள்ளது.

இந்தியா அமைத்துள்ள இந்த சாலை, ஏராளமான முக்கிய ராணுவ நிலைகளை இணைப்பதாக உள்ளது. இதனால் இதுவரை எதிரிகள் இந்திய எல்லைக்குள் நுழைய ஏதுவாக இருந்த சிக்கிம் மற்றும் பூடான் எல்லைகள், தற்போது பலத்த பாதுகாப்பு நிறைந்ததாக மாறி உள்ளது.🌐