தண்ணீர் பற்றாக்குறையை போக்குவதே மோடி அரசின் குறிக்கோள்… நிர்மலா சீதாராமன்..!

தண்ணீர் பற்றாக்குறையை போக்குவதே மோடி அரசின் குறிக்கோள்… நிர்மலா சீதாராமன்..!

♨தண்ணீர் பற்றாக்குறையை போக்குவதே மத்திய அரசின் முக்கிய குறிக்கோள் என பட்ஜெட்டில் உரையில் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

♨நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை வாசித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: நாட்டு மக்களின் குடிநீர் மற்றும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும். அதன் படி, 2024-ம் ஆண்டு, ஒவ்வொரு வீட்டிலும் தங்குதடையின்றி தண்ணீர் சப்ளை செய்யப்படும். இதற்காக, மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
♨ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் வழங்க குழாய் அமைத்து தரப்படும். ஊரக பகுதி மக்களுக்கு சுத்தமான குடிநீர் விநியோகம் செய்ய திட்டங்கள் வகுக்கப்படும். விவசாயத்துறையை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதேசமயம், விவாசய துறையை மேம்படுத்த தனியார் பங்களிப்பும் தேவைப்படுகிறது. அதற்கு மத்திய அரசு ஊக்கமளிக்கும். இதற்காக பல சிறப்பு திட்டங்கள் அமல்படுத்தப்படும் என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

♨ விரைவில் 20 ரூபாய் நாணயம் அறிமுகம்… மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு..!

🔥 20 ரூபாய் நாணயம் விரைவில் வெளியிடப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

🌏 நேற்று மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019-20-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். புதிய 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று அறிவித்தார்.

🔥மேலும் அவர் கூறுகையில், பார்வையற்றவர்களும் அடையாளம் காணும் வகையில் 1,2,5,10 ரூபாய் நாணயங்கள் வெளியிடப்படும். பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்களிப்பு 51 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க நடவடிக்கை, பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்கு விலக்கல் நடவடிக்கை தொடரும். இந்திய அரசின் வெளிநாட்டு கடன் விகிதம், ஜிடிபியின் அடிப்படையில் 5 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

♨ஊடகம், காப்பீடு, விமானப் போக்குவரத் துறையில் அந்நிய நேரடி முதலீடு விதிமுறைகள் தளர்த்தப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்பு

♨ ஊடகம், காப்பீடு, விமானப் போக்குவரத்துத் துறை, காப்பீட்டு துறை, ஒற்றை பிராண்ட் சில்லரை வர்த்தகம் ஆகியவற்றில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான விதிமுறைகள் தளர்த்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.