தமிழகத்தில் இந்த ஆண்டு கடுமையான வறட்சி நிலவிவருகிறது.

தமிழகத்தில் இந்த ஆண்டு கடுமையான வறட்சி நிலவிவருகிறது. தண்ணீருக்காக மக்கள் அல்லாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக சென்னை, சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீர்ப் பற்றாக்குறை பெரிய அளவில் ஏற்பட்டுள்ளது. லாரி தண்ணீருக்காக மக்கள் தவமாய் தவம் இருக்கும் நிலையில் உள்ளனர். லாரி தண்ணீரின் விலை கண்ணீரை வரவழைக்கும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. தண்ணீர்ப் பற்றாக்குறையைப் போக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. என்றாலும், இந்த ஆண்டு பருவமழை பொய்க்காமல் பெய்தால்தான் நிலைமை சீரடையும் என்ற நிலையில்தான் தமிழகம் உள்ளது.
@ ஜோலார் பேட்டை தண்ணீர் வந்தாலும்…!🌐