தமிழகத்தில், வாக்காளர் சரிபார்ப்பு பணி, அடுத்த மாதம் நடக்க உள்ளது.

தமிழகத்தில், வாக்காளர் சரிபார்ப்பு பணி, அடுத்த மாதம் நடக்க உள்ளது.

சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, செப்டம்பர் 1 முதல், செப்டம்பர் 30 வரை நடக்க உள்ளது. அப்போது, வாக்காளர்களை சரி பார்ப்பதற்காக, ஓட்டுச்சாவடி அலுவலர்கள், வீடு வீடாக வருவர். அவர்களிடம், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பது, தங்களுடைய பெயர் என்பதை உறுதிப்படுத்த, வாக்காளர்கள் உரிய ஆவணத்தை அளிக்க வேண்டும்.

பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், ஆதார், ரேஷன் கார்டு, பான் கார்டு, பிறப்பு சான்றிதழ், பள்ளி சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகம், தபால் கணக்கு புத்தகம், வருமான வரி அறிக்கை, குடிநீர், தொலைபேசி, மின் கட்டணம், காஸ் பில், பிறரிடமிருந்து வந்த தபால் ஆகியவற்றில், ஏதேனும் ஒன்றை காண்பிக்கலாம்.வாக்காளர்கள், தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை, பொது சேவை மையத்திற்கு சென்று, சரிபார்த்து கொள்ளலாம்.

சத்யபிரதா சாஹு
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி🌐