தமிழக விவசாயிகள் நலனில் பிரதமர் அதிக ஆர்வம்; சர்க்கரை ஆலை பிரச்சினைகளை தீர்க்க உறுதி: தென்னிந்திய சர்க்கரை ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் தகவல்

தென் இந்திய சர்க்கரை ஆலை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பி.ஜி.பழனிச்சாமி, திருஆரூரான் ஆலை உரிமையாளர் ராம் தியாகராஜன், சக்தி சுகர்ஸ் உரிமையாளர் மாணிக்கம், ராஜ்ஸ்ரீ சுகர்ஸ் உரிமையாளர் ராஜஸ்ரீ, சாமுண்டீஸ்வரி சுகர்ஸ் உரிமையாளர் சீனிவாசன், பொன்னி சுகர்ஸ் உரிமையாளர் ராமநாதன் ஆகியோர் பிரதமரைச் சந்தித்த குழுவில் இடம்பெற்றனர். மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக பாஜக பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.

தமிழகத்தில் கரும்பு உற்பத்தி செய்யும் விவசாயிகளும், அதை நம்பி இருக்கும் சர்க்கரை ஆலை நிர்வாகிகளும் கடந்த சில ஆண்டு களாக பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர். போதிய மழை இல்லாதது, விலை வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் ஆண் டுக்கு 25 லட்சம் டன் உற்பத்தி யாகும் கரும்பு, இந்த ஆண்டு 6 லட்சம் டன் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

கரும்பில் இருந்து சர்க்கரை உற்பத்தி செய்யும் 25 தனியார் ஆலைகளும், 18 கூட்டுறவு மற்றும் பொதுத்துறை ஆலைகளும் கரும்பு உற்பத்தியையே நம்பியுள்ளன. இவை இந்த ஆண்டு தங்களது உற்பத்தி திறனில் 21 சதவீதம் மட்டுமே சர்க்கரை உற்பத்தி செய்திருப்பது இந்த துறையை நம்பியிருக்கும் அனைவரையும் கவலையடையச் செய்துள்ளது. இதற்கு தீர்வு காண சர்க்கரை ஆலை நிர்வாகிகள் சில தினங்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து தங்களது குறைகளை தெரிவித்தனர். “அவர் அளித்த உறுதிமொழி எங்கள் பிரச்சினை களுக்கு தீர்வு ஏற்படுத்தும்” என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார் பி.ஜி.பழனிச்சாமி.

பிரதமரைச் சந்தித்த குழுவில் இடம்பெற்றவரும் தென்னிந்திய சர்க்கரை ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவருமான பழனிச்சாமி யிடம் இந்த சந்திப்பு குறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழ் சார்பில் பேசியபோது அவர் அளித்த சிறப்பு பேட்டி:

போதுமான கரும்பு உற்பத்தி இல்லை, உரிய விலை இல்லை, சர்க்கரை உற்பத்தி விலை அதி கரித்துள்ளது, விவசாயிகளுக்கு பணம் தர முடியவில்லை, வங்கிக் கடனை அடைக்க முடியவில்லை. இதுபோன்ற பிரச்சினைகளால் சர்க்கரை ஆலைகள் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகின் றன. இதனால், 5 லட்சம் நேரடி விவசாயிகளும், ஒரு லட்சம் மறை முக பணியாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கரும்பு விவசாயிகளும், சர்க்கரை ஆலை களும் அந்நியச் செலாவணியை யும் ஈட்டித் தருபவை. இவை அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ள தால் எங்களுக்கு உதவ வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை விடுத்தோம்.

வங்கிக் கடன்களை திருப்பிச் செலுத்த அளிக்கப்படும் நெருக்கடி யில் இருந்து 3 ஆண்டுகள் விலக்கு அளிக்க வேண்டும். கடன் தவணையை மாற்றி அமைக்க வேண்டும். எத்தனால் கொள் கையை தீவிரமாக்கி, மொலாசஸ் உற்பத்திக்கு வழிவகுத்து கூடுதல் லாபம் ஈட்ட அனுமதிக்க வேண்டும். மின் உற்பத்திக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளோம்.

மகாராஷ்டிரா, உத்தரப்பிர தேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வெவ்வேறு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது மற்ற மாநிலங்களைப் பாதிக்கும் என்று தெரிவித்தோம். நாடு முழுவதும் ஒரே விலையை நிர்ணயிக்க வேண் டும் என்று கோரிக்கை வைத்துள் ளோம். தமிழகத்தில் தற்போது குவிண்டாலுக்கு ரூ.2,900 வழங்கப் படுகிறது. இதை இந்திய சர்க்கரை ஆலை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு ரூ.3,500 ஆக உயர்த்தி வழங்கும்படி கேட்டுள்ளது.

தமிழக விவசாயிகளின் நலனில் பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த ஆர்வம் காட்டினார். அவரது ஆர்வம் எங்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்தது. கடந்த 141 ஆண்டுகளில் இல்லாத நெருக்கடி நிலை கடந்த 4 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ளது என்பதை தெரிவித்தோம். கரும்பு விவசாயிகளின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று பிரதமர் உறுதி அளித்து, பிரதமரின் முதன்மைச் செயலர் நிருபேந்திர மிஸ்ராவிடம் பேசச் சொன்னார். அவருடன் உணவுத்துறை செயலர் ரவிகாந்த்துடனும் கடந்த 3 நாட்களாக எங்கள் கோரிக்கைகளை விளக்கியுள்ளோம்.

கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.203 கோடி, வங்கிக் கடன் நிலுவை ரூ.540 கோடி ஆகியவை குறித்தும் விளக்கி னோம். விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கி றோம். பிரதமரைச் சந்திப்பதற்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச் சர் நிர்மலா சீதாராமன் உதவி செய்தார். மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் போன்றோரும் உதவினர். தமிழக அரசும் எங்களுக்கு ஆதரவாக இருந்து வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நாங்கள் சந்தித்தபோது, தங்களால் முடிந்த உதவிகளைச் செய்கிறோம் என்று உறுதியளித்தது ஆறுதலை அளித்துள்ளது. மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

Leave a comment

Your email address will not be published.