தாய்லாந்தில் உயிரிழந்த திமிங்கலத்தின் வயிற்றில் 8 கிலோ பிளாஸ்டிக் பைகள் : சுற்றுசூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி

பாங்காக் : தாய்லாந்தில் உயிரிழந்த திமிங்கலத்தின் வயிற்றில் சுமார் 8 கிலோ பிளாஸ்டிக் பைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த தகவலினை அறிந்த சுற்றுசூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். உலகம் முழுவதும் கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும் என சுற்றுசூழல் ஆர்வலர்களும், கடல் வாழ் உயிரின ஆர்வலர்களும் எச்சரித்து வருகின்றன.

இந்நிலையில் தாய்லாந்து நாட்டில் தெற்குப் பகுதியில் உயிருக்கு ஆபத்தான நிலையில் பிரமாண்ட திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியது. அதை காப்பாற்றுவதற்காக கடல்வாழ் உயிரின ஆர்வலர்கள் பல்வேறு முயற்சிகள்களை எடுத்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அந்த திமிங்கலம் உயிரிழந்தது. இதனைத் தொடர்ந்து திமிங்கம் உயிரிழந்ததற்கான காரணத்தை அறிய உடற்கூறு பரிசோதனை நடத்தப்பட்டதில் அதன் வயிற்றில் சுமார் 8 கிலோ எடையில் 80க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள சூழல் ஆர்வலர்கள் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை பொதுமக்கள் குறைத்துக் கொள்ள வலியுறுத்தி உள்ளனர்.

Leave a comment

Your email address will not be published.