தாய்லாந்தில் உற்பத்தி செய்யப்படும் பனை நுங்குகள்…

🌍 தாய்லாந்தில் உற்பத்தி செய்யப்படும் பனை நுங்குகள் முறையாக பதப்படுத்தப்பட்டு, சிறிய பெரிய ரக டப்பாக்களில் அடைத்து 250 கிராம் (அதிகப்பட்சம் இரண்டு நுங்குகள் வெட்டப்பட்டு அஞ்சு துண்டுகள் இருக்கும்) இந்திய ரூபா மதிப்பில் 250 ருபாய் அளவில் பல உலக நாடுகளிலும் விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக ஐரோப்பா நாடுகளில் குளிர் காலத்தில் கூட இந்த வெயில் கால உணவு பதார்த்தத்தை அதே சுவையுடன் சாப்பிட முடிகிறது.

நம்ம ஊரில் வெயில் காலத்தில் மட்டுமே விளைவிக்கப்படும் நுங்குகள், சரியான விலைக்கு விற்பனை செய்யமுடியாமலும் மிஞ்சுகின்ற நுங்குகளை முறையாக பதப்படுத்த அரசு உதவிகள் கிடைக்காமலும் வறட்சி காரணமாக பனை தொழில் நலிவடைந்துவிட்டதாலும்… நாம் பனை தொழில் தற்சார்பு பொருளாதாரத்தை இழந்து நிற்கின்றோம் 😞

#தற்சார்பு_பொருளாதாரம்.🛑