திகார் சிறையில் ப.சிதம்பரத்துடன் சோனியா காந்தி, மன்மோகன் திடீர் சந்திப்பு.!

திகார் சிறையில் ப.சிதம்பரத்துடன் சோனியா காந்தி, மன்மோகன் திடீர் சந்திப்பு.!

டெல்லி:
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதிஅமைச்சர் ப.சிதம்பரத்துடன், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் இன்று சந்திப்பு பேசினார். இது தலைநகர் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்டு மாதம் 21ம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரது நீதிமன்ற காவல் மேலும் 15 நாள் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரம் முதுகுவலியால் அவதிப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் காங். இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் இன்று திகார் ஜெயில் என்று ப.சிதம்பரத்தை சந்தித்து பேசினார். அப்போது அவருக்கு ஆறுதல் கூறினர்.🌐