தியாகிகள் நாளையொட்டி சென்னை காந்தி மண்டபத்தில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.

சங்கரலிங்கனார், பாஷ்யம், செண்பகராமன் சிலைகளுக்கு ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ, பெஞ்சமின் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திமுக ஆட்சியில் தாரைவார்க்கப்பட்ட அனைத்து உரிமைகளும் அதிமுக ஆட்சியில் மீட்கப்பட்டன. நீட் விவகாரத்தில் திமுக- காங்கிரஸ் இரட்டை வேடம் பேரவையில் தோலுரித்துக் காட்டப்பட்டது

உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் தீர்மானிக்கும், ஹைட்ரோ கார்பனுக்கு அனுமதி என்பது மாநில அதிகாரத்திற்கு உட்பட்டது என கூறினார்.